பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paul நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை எதிர்கொள்கிறார்.
செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் நிர்வாகக் குழு இதற்கு ஒரு செயல்முறையை ஆரம்பித்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஊடாக அவரை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து வெளியேற்ற முடியும்.
கட்சியின் வழிநடத்துதல், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் குறித்த தலைவரின் நிலைப்பாடு தொடர்பாக பல மாதங்களாக ஏற்பட்ட உட்கட்சி மோதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Jenica Atwin கடந்த வாரம் Liberal கட்சியில் இணைந்து கொண்ட நிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த செயல்முறை முன்னெடுக்கப்படுகின்றது
ஆனாலும் பதவி விலகுவதற்கான அழைப்புகளை Annamie Paul தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.