வர்த்தகக் கூட்டாளிகளை பன்முகப்படுத்துவது கனடாவின் இலக்கு என அமைச்சர்கள் Sean Fraser, Marc Miller ஆகியோர் தெரிவித்தனர்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அரசியல் நகர்வுகளை கனடா “ஆர்வத்துடன் உற்று நோக்கும்” என கனடாவின் நீதித்துறை அமைச்சர் Sean Fraser தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான தற்போதைய சவால்களைக் கடந்து கனடாவின் பொருளாதார நலன்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என புதன்கிழமை (04) காலை நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் தூதரக ரீதியாகத் தொடர்பு கொள்வதை கனடா எப்போதும் வழக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சர் Marc Miller கூறினார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க மக்கள் தங்கள் குரலைப் பதிவு செய்ததற்கான மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
கனடாவிற்கான சிறந்த வர்த்தகச் சலுகைகளைப் பெற நாங்கள் எப்போதும் தொடர்ந்து போராடுவோம் எனவும் அமைச்சர் Marc Miller தெரிவித்தார்.
