தேசியம்
செய்திகள்

Commonwealth நாடுகளுடன் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் அவசியத்தை வலியுறுத்திய Pierre Poilievre 

Conservative தலைவர் Pierre Poilievre இங்கிலாந்து சென்றடைந்தார்.

ஐரோப்பிய நாடுகளுக்கான தனது திட்டமிடப்பட்ட பயணத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (03) அவர் இங்கிலாந்து சென்றடைந்தார்.

அங்கு தலைநகர் London-னில் ஆற்றிய உரையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுடன் கூட்டாண்மையை Pierre Poilievre வலியுறுத்தினார்.

Commonwealth நாடுகளுடன் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இங்கிலாந்தில் சந்திப்புகளை முடித்துக் கொண்டு Pierre Poilievre ஜெர்மனி பயணிக்க ஏற்பாடாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தில் ஒத்த எண்ணம் கொண்ட அரசியல்வாதிகளை சந்தித்து, பிரதமர் Mark Carney-க்கு போட்டியாக இருக்க முடியும் என தான் நம்பும் அரசியல், பொருளாதாரக் கண்ணோட்டத்தை வகுக்க திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் Mark Carney இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான பயணத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Beijing ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை

Lankathas Pathmanathan

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதியில் NDP வெற்றி!

Lankathas Pathmanathan

Leave a Comment