தேசியம்
செய்திகள்

சட்டவிரோத குடியேற்ற முகவர்களுக்கு $1.5 மில்லியன் வரை அபராதம்?

சட்டவிரோத குடியேற்ற முகவர்களுக்கு $1.5 மில்லியன் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை கனடிய மத்திய அரசாங்கம் அமுல்படுத்தியது.

கனடாவின் குடியேற்ற, குடியுரிமை அமைப்புகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய சட்டம் அமைகிறது.

சட்டவிரோத, அங்கீகாரமற்ற குடியேற்ற முகவர்களுக்கு அதிகபட்சமாக $1.5 மில்லியன் வரை கடுமையான நிதி அபராதம் விதிக்கும் புதிய சட்டம் புதன்கிழமை (28) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

கனடியக் குடியேற்றத் துறை அமைச்சர் Lena Metlege Diab இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதில் அபராதம் விதிக்கப்படும் போலி முகவர்கள், உரிமம் பெற்ற கனடிய வழக்கறிஞர்களின் பெயர்கள், அவர்களின் குற்ற விவரங்களுடன் கனடியக் குடியேற்றத் துறையின் – IRCC – அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரங்கமாகப் பட்டியலிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இதில் சட்டத்தை மீறுபவர்கள் கடுமையான விளைவுகளைச் எதிர்கொள்வார்கள் என அமைச்சர் Lena Metlege Diab தெரிவித்தார்.

Related posts

Scarboroughவில் புதன்கிழமை தமிழர்களுக்கான சிறப்பு COVID தடுப்பூசி வழங்கும் திட்டம்

Gaya Raja

Caribbean பிராந்திய தலைவர்கள் கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட Nova Scotiaவில் அவசர நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment