தேசியம்
செய்திகள்

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட Nova Scotiaவில் அவசர நிலை

Nova Scotiaவின் Halifax அருகே தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (28) இரவு, Halifax நகர முதல்வர், பிராந்திய சபை உறுப்பினர்கள் இந்த அவசர நிலையை அறிவித்தனர்.

இந்த அவசர நிலை குறைந்தது ஏழு நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த காட்டுத்தீ இதுவரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என திங்கட்கிழமை (29) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கள் காலை நிலவரப்படி மாகாணத்தில் மொத்தம் 13 காட்டுத் தீ எரிகிறது.

திங்கள் காலை வரை  788 hectares பரப்பளவில் தீ பரவியதாக மாகாண இயற்கை வளங்கள் திணைக்களம்  மதிப்பிட்டுள்ளது.

200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீயின் காரணமாக காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இந்த காட்டுத் தீயின் காரணமாக 16,400 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Related posts

LGBTQ எதிர்ப்பு கருத்துக்காக Blue Jays அணி உறுப்பினர் நீக்கம்

Lankathas Pathmanathan

Conservative கட்சி உறுப்பினர்களின் தெரிவு Poilievre – கனடியர்களின் தெரிவு Charest!

Lankathas Pathmanathan

Mississauga விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment