தேசியம்
செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக வேண்டும்!

கனேடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

NDP தலைவர் Jagmeet Singh இந்த அழைப்பை விடுத்தார்.

இந்த விடயம் குறித்து கனடியர்களுடன் தொடர்ச்சியான பொது உரையாடல்களை நடத்த முன்னர் சிறப்பு அறிக்கையாளர் பதவியில் இருந்து விலகவேண்டும் என Jagmeet Singh வலியுறுத்துகிறார்.

David Johnston பதவி விலக வேண்டும் என கோரும் ஒரு பிரேரணையை திங்கட்கிழமை NDP (29) நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.

மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் பொது விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என இந்த பிரேரணை வலியுறுத்துகின்றது.

Related posts

பல் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு இரண்டு மடங்கு அதிக செலவு

Lankathas Pathmanathan

COVID மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

Florida படகு வெடிப்பில் கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment