தேசியம்
செய்திகள்

சீனாவின் வெளிநாட்டு தலையீட்டின் இலக்கான NDP நாடாளுமன்ற உறுப்பினர்?

சீனாவின் வெளிநாட்டு தலையீட்டில் தானும் இலக்காகியுள்ளதாக NDP நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் தனது நீண்டகால சந்தேகத்தை கனடாவின் உளவு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Jenny Kwan திங்கட்கிழமை (29) தெரிவித்தார்.

Hong Kongகில் மனித உரிமைகளுக்காகவும், சீனாவில் Uyghur முஸ்லிம் சிறுபான்மையினருக்காகவும் குரல் கொடுத்த தன்னை சீன அரசாங்கம் குறிவைத்ததாக அவர் கூறினார்.

கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை கடந்த வெள்ளிக்கிழமை (26) ஒரு மணிநேரம் இந்த விடயம் குறித்து தனக்கு விளக்கமளித்ததாக அவர் தெரிவித்தார்.

2019 கனடிய பொது தேர்தலின் முன்னர் சீனாவால் குறிவைக்கப்பட்டதை கனடாவின் உளவு நிறுவனம் தன்னிடம் உறுதிப்படுத்தியதாக Jenny Kwan கூறினார்.

ஆனாலும், தனக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் நடவடிக்கைகளின் தன்மையை தன்னால் வெளியிட முடியாது என அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து ர பல ஆண்டுகளாக  தகவல் பகிரப்படாதது கவலையளிக்கிறது எனவும் Jenny Kwan  கூறினார்.

Related posts

குடும்பங்களை ஒன்றிணைக்கும் திட்டத்தில் மாற்றம்?

Lankathas Pathmanathan

எல்லை சீர்திருத்த சட்டமூலம் அறிமுகம்: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

சிறுவர்களுக்கு எதிரான குற்ற விசாரணையில் 107 பேர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment