தேசியம்
செய்திகள்

மூன்றாவது அலையின் உச்சத்திலிருந்த தொற்றின் எண்ணிக்கை 70 சதவீதம் வரை குறைந்தது

மூன்றாவது அலையின் உச்சத்திலிருந்த COVID தொற்றின் எண்ணிக்கை தற்போது 70 சதவீதம் வரை குறைந்துவிட்டது  என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam செவ்வாய்க்கிழமை இந்த தகவலை வெளியிட்டார். மூன்றாவது அலையின் April  நடுப்பகுதியில் இருந்து தினசரி புதிய தொற்றுகள் 70 சதவீதம் குறைந்துள்ளதாக வைத்தியர் Tam தெரிவித்தார்.

கனடாவில் தற்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,700 புதிய தொற்றுக்கள்  பதிவாகின்றன. கடந்த மாத இந்த எண்ணிக்கை தினசரி சராசரியாக 9,000 புதிய தொற்றுக்களாக இருந்தது .

இதேவேளை கனடாவில் திங்கட்கிழமை வரை, தகுதிவாய்ந்த கனேடியர்களில் 58 சதவீதமானவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

Related posts

கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுப்பு

Lankathas Pathmanathan

தமிழீழ விடுதலைப் புலிகள், உலகத் தமிழர் இயக்கம் மீதான தடை கனடாவில் நீடிப்பு

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு தேசிய நினைவுச் சின்னம்

Lankathas Pathmanathan

Leave a Comment