தேசியம்
செய்திகள்

Ontarioவின் வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு முடிவுக்கு வந்தது!

COVID தொற்றின்  மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் Ontarioவில் அமுல்படுத்தப்பட்ட  வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது.

இந்த உத்தரவை அமுல்படுத்தி இரண்டு மாதங்களுக்குப் பின்னர், சுகாதாரப் பாதுகாப்பு குறிகாட்டிகள் தொடர்ந்து முன்னேற்றத்தைக் காண்பிக்கும் நிலையில் இந்த உத்தரவு இரத்து செய்யப்பட உள்ளது. April மாதம் 8ஆம் திகதி Ontarioவின் வீட்டில் முடக்குவதற்கான உத்தரவும் அவசரகால அறிவிப்பும் விதிக்கப்பட்டது.

தொற்றுக்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் May மாதத்தில் குறையத் தொடங்கிய நிலையில்  Ontario  அரசாங்கம் முழு மாகாணத்திற்கும் தனது மூன்று கட்ட மீண்டும் திறக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் திங்கட்கிழமை வரை, Ontarioவில் வசிப்பவர்களில் 67 சதவீதமானவர்கள் தமது முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் Christine Elliott தெரிவித்தார்

Related posts

Ontarioவை மீண்டும் திறக்கும் திகதியை முன் நகர்த்துவது குறித்து முதல்வர் பரிசீலனை?

Gaya Raja

Ontarioவின் 18ஆவது முதல்வர் Bill Davis மரணம்!

Gaya Raja

பசுமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் தெரிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment