Manitoba வியாழக்கிழமை முன் எப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுக்களை பதிவு செய்தது.
வியாழக்கிழமை 560 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் Manitobaவில் பதிவு செய்தனர். இதற்கு முன்னர் கடந்த வருடம் November மாதம் 23ஆம் திகதி அதிக எண்ணிக்கையாக 546 தொற்றுக்கள் பதிவாகியிருந்தன.
வியாழக்கிழமை மேலும் 3 தொற்றுகளையும் Manitoba அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேலான மரணங்கள் Manitobaவில் பதிவாகியுள்ளன. இதுவரை 43 ஆயிரத்து 700 புதிய தொற்றுக்களும் 1,002 மரணங்களும் Manitobaவில் பதிவாகியுள்ளன.