அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் முன்னேற்றம் குறித்து கனடிய பிரதமர் Mark Carney கருத்துத் தெரிவித்தார்.
அமெரிக்கா தற்போது கனடாவின் நியாயமான நிலைப்பாட்டை நோக்கி இறங்கி வந்து கொண்டிருப்பதாக Mark Carney அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் கடுமையான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் வரலாறு காணாத வேகத்தில் முன்னேறி வரும் சூழலில் பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.
அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள இந்தத் தூதரகப் பேச்சுவார்த்தை வேகம் குறித்து தனது திருப்தியை Mark Carney வெளிப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் வகுத்த உத்திக்கு கிடைத்த வெற்றி” இதுவென பிரதமர் கூறினார்.
இந்த நிலையில் இரு நாட்டுத் தலைமைகளுக்கும் இடையே திரைமறைவில் நிலவி வந்த வர்த்தக முட்டுக்கட்டை நிலை உடைந்து, இறுதி உடன்பாட்டை நோக்கி நகர்வது உறுதியாகியுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் அழுத்தம் அமெரிக்காவின் இந்த நிலை மாற்றத்தின் காரணியாக குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் November 3 அன்று நடைபெற உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
