September 24, 2026
தேசியம்
செய்திகள்

Hamilton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் Andrea Horwath

October மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் Hamilton நகர முதல்வர் பதவிக்கு Andrea Horwath போட்டியிடவுள்ளார்.

Hamilton நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை, Ontario மாகாணத்தின் முன்னாள் NDP தலைவரான Andrea Horwath செவ்வாய்க்கிழமை (26) அறிவித்தார்.

2004ஆம் ஆண்டு மாகாண அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் Horwath, பல ஆண்டுகள் Hamilton நகர சபை உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.

2009ஆம் ஆண்டு Ontario மாகாண NDP தலைவராக தெரிவு செய்யப்பட்ட Horwath, நான்கு மாகாண தேர்தல்களை தலைவராக எதிர்கொண்டவர்.

கடந்த June மாதம் மாகாணசபை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, Ontario NDP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக Horwath அறிவித்தார்.

Hamilton நகர முதல்வர் Fred Eisenberger மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வீடு வாங்குபவர்கள் அதிக போட்டி நிறைந்த சந்தையை எதிர்கொண்டனர்

Lankathas Pathmanathan

கிழக்கு கனடாவில் தொடர்ந்தும் பனிப்பொழிவு எச்சரிக்கை

இரண்டு இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal கட்சி

Lankathas Pathmanathan

Leave a Comment