தேசியம்
செய்திகள்

கனடா தேர்தல்களில் புதிய வரலாற்றுச் சாதனை: முன்கூட்டிய வாக்குப் பதிவில் பெரும் அதிகரிப்பு?

கனடாவின் பல்வேறு மாகாண, உள்ளாட்சித் தேர்தல்களில், முன்கூட்டிய வாக்குப்பதிவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை படைத்து வருகின்றது.

சமீப காலமாக Toronto, Quebec, Manitoba ஆகிய பகுதிகளில் நடந்து வரும் தேர்தல் களம் அனைத்திலும் முன்கூட்டிய வாக்குப் பதிவு  புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பல்வேறு தேர்தல்களில்  இறுதி நாளில் ஏற்படும் நீண்ட வரிசைகளையும், நேர விரயத்தையும் தவிர்க்க மக்கள் முன்கூட்டியே வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Toronto மாநகர உள்ளாட்சி தேர்தல்: Toronto நகரசபை தேர்தலுக்கான 6 நாள் முன் கூட்டிய வாக்குப்பதிவில் மட்டும் 2,22,550 தகுதி உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர். இது கடந்த 2022 தேர்தலை விட 48 சதவீதம் அதிகமாகும்.

Alberta பொது வாக்கெடுப்பு: அண்மையில் நடந்து முடிந்த Alberta வாக்கெடுப்பில், அஞ்சல் வழி சிறப்பு வாக்குச்சீட்டுகள், 3 நாள் முன்கூட்டிய வாக்குப்பதிவை சேர்த்து 10 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் இறுதித் தேர்தல் நாளுக்கு முன்பாக பதிவாகி புதிய மைல்கல்லை எட்டியது.

Manitoba, Quebec மாகாணங்கள்: இந்த இரண்டு மாகாணங்களிலும் அண்மைய உள்ளாட்சி, இடைத் தேர்தல்களில் வழக்கமான சராசரியை விட முன்கூட்டிய வாக்குப்பதிவு மையங்களில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இந்த வாக்குப் பதிவில் மக்கள் காட்டும் இந்த அதிரடி ஆர்வம், தேர்தலின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதத்தை பெரிதும் அதிகரிக்குமா என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

Related posts

Ontario விளம்பரத்திற்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரிய கனடிய பிரதமர்?

Lankathas Pathmanathan

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

Lankathas Pathmanathan

இலங்கையில் உள்ள தமிழ் ஊடகர்கள் தொடர்பில் கனடாவின் கரிசனை தொடரும்!

Lankathas Pathmanathan

Leave a Comment