Ontario மாகாணத்தில் நடைபெறும் நகராட்சித் தேர்தலில் குறைந்தது 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திங்கட்கிழமை (26) இந்தத் தேர்தல் இறுதி வாக்களிப்பு நடைபெறுகிறது.
இதில் குறைந்தது 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதை தேசியம் உறுதிப்படுத்துகிறது.
இது கனடாவின் நகராட்சித் தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத தமிழ் பேசும் வேட்பாளர்கள் எண்ணிக்கையாகும்.
இம்முறை பல்வேறு நகரங்களின் நகர முதல்வர், பிராந்திய உறுப்பினர், நகர சபை உறுப்பினர்கள், கல்விச் சபை அறங்காவலர் (Trustee) பதவிகளுக்கு தங்களது திறமையையும், சமூக சேவையையும் முன்னிறுத்திப் பல தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
Toronto நகரில் 14, Markham நகரில் 5, Durham பிராந்தியத்தில் 7, Waterloo நகரில் 1, Ottawa நகரில் 1, Brampton நகரில் 1, Shelburne நகரில் 1, Kingsville நகரில் 1, Cornwall நகரில் 1 என தமிழர்கள் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர்.
இதில் நகர முதல்வர் பதவிக்கு நான்கு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
Whitby, Waterloo, Ottawa, Shelburne நகரங்களின் முதல்வர் பதவிக்கு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
தவிரவும் இம்முறை தேர்தலில் Toronto நகரின் Scarborough பகுதிகளில் தமிழ் வேட்பாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
இதில் ஏற்கனவே நகரசபை உறுப்பினராக உள்ள நீதன் சான் Scarborough-Rouge Park தொகுதியில், Scarborough Southwest தொகுதியின் நகர சபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Toronto கல்விச் சபையின் 12 ஆம் வட்டாரத்தில் முன்னாள் கல்விச் சபை உறுப்பினர் அனு ஸ்ரீஸ்கந்தராஜா மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து தமிழர்களின் விபரம் அடங்கிய கட்டுரை ….
முன்னெப்போதும் இல்லாத சாதனை: நகராட்சித் தேர்தலில் 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டி!
