அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), உலகளாவிய தமிழர் பொருளாதார, சமூக வலையமைப்பை (Global Tamil Economic Social Network) அறிவித்துள்ளது.
அனைத்துலகத் தமிழர் பேரவையின் செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் என்ற நான்கு நாள் உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த வலையமைப்பின் ஆரம்பகட்ட ஒருங்கிணைப்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
Toronto பல்கலைக்கழகத்தில் October 16 நடைபெற்ற நிகழ்வில் இந்த அறிவித்தல் வெளியானது.
உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், முதலீட்டாளர்கள், தொழில்சார் வல்லுநர்களை ஒன்றிணைப்பது இந்த வலையமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது என அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
தமிழ் சமூகங்களிடையே முதலீடுகள், தொழில்முனைவு, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், உலகளவில் பின்தங்கியுள்ள தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.
இந்த வலையமைப்பை வழிநடத்தவும் விரிவுபடுத்தவும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பின்வரும் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
- முனைவர் இரா. சீனிவாசன் – (இந்தியா).
- திரு. சிவராஜா இராமநாதன் – (இந்தியா).
- பேராசிரியர் க. அமிர்தலிங்கம் – (இலங்கை).
- பேராசிரியர் இ. ஆ. செல்வநாதன் – (அவுஸ்திரேலியா).
- பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் – (இலங்கை).
- பேராசிரியர் ஜெயப்பிரபா சுரேஷ் – (இலங்கை).
- திரு. உமேஷ் வல்லிபுரம் – (கனடா).
