British Columbia (B.C.) மாகாணத் தேர்தலில் Conservative கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.
British Columbia (B.C.) மாகாணத் தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை (24) நடைபெற்றது.
முதல்வர் David Eby-யின் உடனடித் தேர்தல் சூதாட்டம் B.C. Conservative கட்சிக்கு பெரும்பான்மை அரசாங்கத்தைப் பரிசாக அளித்துள்ளது.
B.C. மாகாணத்தின் மொத்தமுள்ள 93 தொகுதிகளில் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
28 தொகுதிகளில் NDP கட்சியும், 2 தொகுதிகளில் பசுமை கட்சியும் வெற்றி பெற்றது.
இந்த அதிரடித் தேர்தல் முடிவுகளின் மூலம் Lorne Doerkson தலைமையிலான Conservative கட்சி புதிய ஆட்சியை அமைக்கவுள்ளது
இதன் மூலம், கடந்த 100 ஆண்டுகளில் British Columbia-வின் முதல் Conservative அரசாங்கத்தை Lorne Doerkson வழி நடத்தவுள்ளார்.
இந்த நிலையில் NDP கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து David Eby விலகினார்.
தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாக கூறி, David Eby தனது பதவியில் இருந்து விலகுவதாக தனது உரையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
