Toronto நகர முதல்வர் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் Olivia Chow, Brad Bradford ஆகிய இருவருக்கும் இடையே கணிக்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இறுதியாக வெளியான கருத்துக் கணிப்பில் Olivia Chow-வை Brad Bradford முந்தி நூலிழையில் முன்னிலையில் உள்ளார்.
புதன்கிழமை(21) வெளியாகியுள்ள இந்த புதிய பிரத்யேகக் கருத்துக்கணிப்பு தரவுகள தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Toronto வாக்காளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்த இறுதி கட்ட ஆய்வில், Brad Bradford 38.4 சதவீத ஆதரவையும், Olivia Chow 37.9 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளார்.
நகரசபை உறுப்பினர் Brad Bradford வழங்கிவரும் வாக்குறுதிகள் நடுத்தர வர்க்க வாக்காளர்களைக் கவர்ந்துள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
தற்போதைய நகர முதல்வர் Olivia Chow, முற்போக்கு சிந்தனையாளர்கள், நகர்ப்புற மையப்பகுதி மக்களின் ஆதரவை வலுவாக பெற்றுள்ளது இந்த கருத்துக் கணிப்பு மூலம் தெளிவாகிறது.
இதில் சுமார் 23.7 சதவீத வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்ற இறுதி முடிவு எடுக்காமல் உள்ளதால், இவர்களின் வாக்குகளே Toronto நகரின் அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் நிலை தோன்றியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற முன்கூட்டிய வாக்குப்பதிவில் சுமார் 2.22 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஏற்கனவே தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் இறுதி வாக்களிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (26) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
