Alberta பொதுவாக்கெடுப்பு குறித்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத UCP கட்சிக்குள் இருக்கும் பிரிவினைவாத ஆதரவாளர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் என Alberta முதல்வர் Danielle Smith எச்சரித்தார்.
பிரிவினைக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான UCP கட்சிக்குள் இருக்கும் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்த முடிவை ஏற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மாறாக இந்த முடிவை ஏற்க முடியாதவர்கள் தங்களுக்கு பொருத்தமான வேறு இடத்தை நோக்கி வெளியேறலாம் என முதல்வர் தெரிவித்தார்.
Edmonton நகரில் புதன்கிழமை (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய Danielle Smith, பிரிவினைவாதக் கொள்கை கொண்ட மாகாணசபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட அதிரடி ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
UCP கட்சி அடிப்படையில் ஒரு கூட்டாட்சி ஆதரவு கட்சி (Federalist Party) என அவர் கூறினார்.
இந்தத் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் வகையில் எந்த ஒரு வெளிநாட்டுத் தலையீடும் இருந்ததாகத் தமக்குத் தகவல் இல்லை எனவும் முதல்வர் கூறினார்.
Alberta மக்கள் கனடாவுடன் ஒன்றிணைந்து நீடிக்க 76.4 சதவீதமான பெரும்பான்மை ஆதரவுடன் இந்த வாரம் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
