தேசியம்
செய்திகள்

கனடா-அமெரிக்க வர்த்தகப் போர்: இடைக்காலத் தேர்தலுக்கு முன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை!

கனடா – அமெரிக்கா இடையே நிலவி வரும் கடுமையான வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்பாக சாத்தியமில்லை என தெரியவருகிறது.

கனடிய அரச வட்டாரங்கள் மூலம் இந்தத் தகவல் வெளியானது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார முட்டுக்கட்டை நிலை மேலும் நீடிக்கும் நிலை தோன்றியுள்ளது.

இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்பில் இருந்தாலும், முறையான பேச்சுவார்த்தைகள் எதுவும் தற்போது நடைபெறவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

கனடாவுடனான வர்த்தக போரினால் அமெரிக்காவிற்குள் வாழ்வாதார செலவுகள் அதிகரித்துள்ளன.

இதனால் எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த சில முக்கியக் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் Donald Trump கொள்கைகளில் இருந்து தங்களைத் தள்ளி வைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதன் காரணமாக, தேர்தலுக்கு முன்பாக அமெரிக்கா அவசரமாக ஒப்பந்தம் ஒன்றை செய்ய எத்தனிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தாலும் தற்போது அந்த வாய்ப்பு முற்றிலும் இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் November 3 நடைபெறவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

World Series பட்டத்தை தவற விட்ட Blue Jays!

Lankathas Pathmanathan

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணம் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

இரண்டு மாதங்களுக்கு $1.5 பில்லியன் உபரியாகப் பதிவானது

Lankathas Pathmanathan

Leave a Comment