September 10, 2026
தேசியம்
செய்திகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணம் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் மரணம் குறித்த செய்திகள் அதிர்ச்சிகரமானவை என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பத்தினருக்கும் அவரது நீதிக்காக போராடும் அனைவருக்கும் தனது இரங்கலை Justin Trudeau தெரிவித்துள்ளார்

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் Alexei Navalny மர்மமான முறையில் ரஷ்ய சிறையில் உயிரிழந்துள்ளார்.

Alexei Navalny, ரஷ்யாவுக்கும் ரஷ்யர்களுக்கும்  சிறந்த எதிர்காலத்திற்காக போராடியவர் என Justin Trudeau கூறினார்.

ரஷ்யாவில் ஊழலுக்கு எதிராக போராடிய Alexei Navalny, சிறையில் அடைக்கப்பட்டிருக்கக் கூடாது எனவும் கனடிய பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த மரணம் Vladimir Putinனின் “தொடர்ச்சியான அடக்குமுறை ஆட்சியின்” வலிமிகுந்த நினைவூட்டல் என  கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கூறினார்.

இந்த மரணத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin காரணமென Conservative தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டினார்.

Vladimir Putinனின் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக  Alexei Navalny அவர் கொல்லப்பட்டார் என NDP தலைவர் Jagmeet Singh  தெரிவித்தார்.

Related posts

அவசர காலச்சட்ட பயன்பாடு குறித்த பொது விசாரணைகள் வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் சுகாதாரச் செலவுகளில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்?

Lankathas Pathmanathan

அமெரிக்காவின் அண்மைய வரி விதிப்பு: கனடிய பிரதமர் உடனடியாக பதிலளிக்க மாட்டார்?

Lankathas Pathmanathan

Leave a Comment