தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர் பேரவையிடம் பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மைக்கான பொது அழைப்பு!

கனடிய தமிழர் பேரவையிடம் பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மைக்கான பொது அழைப்பு விடுக்கப்படுகிறது.

கனடிய தமிழர் பேரவையின் – CTC – இமாலைய பிரகடன முயற்சியில் அண்மைய ஈடுபாடு குறித்த பின்னணியில் இந்த கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

வியாழக்கிழமை (15) சந்தித்த கனடிய தமிழர்கள் சிலர் இந்த விடயம் குறித்து விவாதித்தனர்.

இந்த சந்திப்பில் CTC முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஊடகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் கனடிய சமூகத்தின் ஆணை பெறாமல் அல்லது அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்திய  ஆழ்ந்த வேதனையை, கவலை குறித்து இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை CTC நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து கனடிய தமிழர்களுக்கு அறிவிக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ஊடகவியளாளர் சந்திப்பொன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகிறார்!

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவை தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கை: சுற்றுச்சூழல் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment