கனடா இறுதியில் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.
இதன் மூலம் கனடா அமெரிக்காவுடன் இணையும் தனது சர்ச்சை மிகுந்த கருத்தை Donald Trump மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்காவின் Arizona மாநிலத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரச்சாரப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமெரிக்க ஜனாதிபதி இந்த அதிரடி கருத்தை வெளியிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் தொடர்பான மோதல்களுக்கு மத்தியில் அவரது இந்தப் பேச்சு சர்வதேச விவாதத்தை கிளப்பியுள்ளது.
கனடா இறுதியில் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறுவது மட்டும் தான் இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் ஒரே தீர்வாக இருக்க முடியும் என Donald Trump தனது பேச்சில் குறிப்பிட்டார்.
கனடாவின் மாகாணங்கள் பிரிந்து செல்ல வேண்டும் என அண்மையில் Elon Musk தனது X தளத்தில் பதிவிட்ட சர்ச்சை ஓய்வதற்குள், இந்த புதிய சர்ச்சை ஆரம்பமாகியுள்ளது
Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிவது தொடர்பான பொது வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
அமெரிக்க அரசியலில் தலையிடுவதை கனடிய அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கனடாவுக்கான அமெரிக்க தூதர் Pete Hoekstra எச்சரித்த அதே தினம் அமெரிக்கா ஜனாதிபதியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை அமெரிக்க அரசியலில் கனடாவின் வெளிநாட்டுத் தலையீடாக கருதுவதாகவும் Pete Hoekstra ஊடக செவ்வி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
கனடா எப்போதும் அமெரிக்காவுடன் இணையாது என் கனடிய பிரதமர் Mark Carney, மாகாண முதல்வர்கள் உட்பட பலரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
