கனடிய பிரதமர் இந்த வாரத்தில் Alberta மாகாணத்திற்கு நேரடியாகச் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
கனடாவிலிருந்து Alberta மாகாணம் பிரிந்து செல்ல வேண்டுமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு அடுத்த வாரம் 19-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அங்கு நேரடியாக செல்லவுள்ள பிரதமர் Mark Carney, இந்த பிரிவினைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்..
Alberta மாகாண மக்கள் கனடாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்து இந்த வாக்கெடுப்பில் தங்களின் இறுதி பதிவைச் செய்யவுள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு முடிவு உடனடியாக மாகாணத்தைப் பிரித்து விடாது என்றாலும், பிரிந்து செல்வதற்கான அடுத்தகட்ட அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பை நடத்த வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் முதல் படியாக இது அமைகிறது.
இந்த நிலையில் கனடாவை ஒன்றிணைத்து வைத்திருப்பதில் இந்த வாக்கெடுப்பு மிக முக்கிய பங்களிக்கும் என்பதால், மத்திய அரசாங்கம் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக கையாண்டு வருகிறது.
தனது Thanksgiving தின செய்தியிலும் பிரிவினைவாத பாதையைத் தவிர்க்குமாறு Alberta வாக்காளர்களை வலியுறுத்தினார்.
Alberta கனடாவுக்குள் நீடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அவரது ஒளிப்பதிவு செய்தி வெளியாகியுள்ள நிலையில் இந்தப் பயணம் குறித்த தகவல் வெளியானது.
இந்தத் தேர்தல் களம் தற்போது சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
இதில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருப்பதற்கான அறிகுறிகளை கண்காணித்து வருவதாக பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிரதான எதிர்க்கடசியான Conservative கடசித்த தலைவர் Pierre Poilievre-ரும் இந்த வாரம் Alberta சென்று அங்கு பிரிவினைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
