தேசியம்
செய்திகள்

Britain விமானப்படை தளம் மீது தாக்குதல் முயற்சி: ஈரான் மீது கனடா கடும் கண்டனம்!

Britain RAF Fairford இராணுவ விமானப்படை தளத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிக்கு கனடா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான் காரணம் எனக் கூறி, கனடா, அமெரிக்கா, Britain உள்ளிட்ட 29 உலக நாடுகள் கூட்டாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கனடா உள்ளிட்ட நட்பு நாடுகள் திங்கட்கிழமை (12) கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

Britain இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் இத்தகைய மறைமுக தாக்குதல் முயற்சிகளும், சதித்திட்டங்களும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்ட 29 நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டறிக்கை ஈரான் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க உறுதி தெரிவிக்கிறது.

ஈரானின் இத்தகைய சட்டவிரோத, மறைமுக தாக்குதல் உத்திகளுக்கு சர்வதேச அளவில் முற்றுப்புள்ளி வைக்க கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களின் உளவுத்துறை, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த உள்ளதாக இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 27-ஆம் திகதி Britain தென்மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் RAF Fairford இராணுவ விமானப்படை தளத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற 3 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

அந்த வாகனங்களில் இருந்து எரியூட்டக் கூடிய petrol உள்ளிட்ட திரவங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் வாகனத்தில் பயணித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தத் தளம் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததால், இந்தச் சதித் திட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என Britain-னுக்கான ஈரான் தூதர் Seyed Ali Masouvi மறுத்துள்ளார்.

Related posts

July மாதம் 90 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

Gaya Raja

இரண்டு TTC பேருந்துகள் மோதியதில் 13 பேர் காயம்

Lankathas Pathmanathan

மீண்டும் ஆட்சி அமைக்கும் Liberal!

Lankathas Pathmanathan

Leave a Comment