தேசியம்
செய்திகள்

300 சதவீதம் அதிகரித்த ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள்

ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள் 2020ஆம் ஆண்டு கனடாவில் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய அறிக்கையில் இந்த தரவு வெளியானது.

COVID தொற்றின் முதல் வருடத்தில், கிழக்கு, தென்கிழக்கு ஆசிய கனடியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் முந்தைய ஆண்டுடன்  ஒப்பிடும்போது 301 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் கனடாவில் மொத்தம் 2,669 வெறுப்புக் குற்றங்கள் காவல்துறையில் பதிவாகின.

இது முந்தைய ஆண்டை விட 37 சதவீதம் அதிகமாகும்.

2009 இல் தரவு சேகரிப்பு ஆரம்பித்ததில் இருந்து 2020ஆம் ஆண்டை வெறுப்பு குற்றங்களுக்கான மோசமான ஆண்டாக மாற்றுகிறது.

இவற்றில் கிழக்கு, தென்கிழக்கு ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 2020ஆம் ஆண்டில் ஏனைய எந்தக் குழுவையும் விட பெரிய அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளது.

Related posts

கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா ஜனாதிபதி மதிக்கிறார்: Mark Carney

Lankathas Pathmanathan

கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை: Justin Trudeau

Lankathas Pathmanathan

அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment