சமூக ஊடகங்களில் பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பில் Montreal நபர் ஒருவர் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
30 வயதான Paul Clarissou இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
இவர் பிரதமர் Justin Trudeauவுக்கு எதிராக X வலைத்தளத்தில் மரண அச்சுறுத்தல் விடுத்ததாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
January 31 இந்த விசாரணையை ஆரம்பித்ததாக RCMP கூறியது.
Quebec மாகாணத்தில் பிரதமருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை RCMP விசாரிப்பது இது முதல் முறை அல்ல என RCMP செய்தித் தொடர்பாளர் கூறினார்.