தேசியம்
செய்திகள்

Haiti ஜனாதிபதியின் படுகொலையை கண்டித்த கனேடிய பிரதமர்

Haiti ஜனாதிபதி Jovenel Moise தனது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டதை கனேடிய பிரதமர் கடுமையாக கண்டித்துள்ளார்.

இந்த பயங்கரமான படுகொலையை கண்டிப்பதாக பிரதமர் Justin Trudeau ஒரு  Twitter பதிவில் தெரிவித்தார். Haiti மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான எந்த உதவிகளையும் வழங்கவும்  கனடா தயாராக உள்ளதாகவும் கனேடிய பிரதமர் கூறினார்.

 இந்த நிலையில் Haitiயில் உள்ள கனேடியர்களுக்கு பயண ஆலோசனையை கனேடிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. Haitiயில் நிலைமை விரைவாக மோசமடைய கூடும் என  எச்சரித்த கனேடிய வெளிவிவகார அமைச்சு, அங்குள்ள கனேடியர்களுக்கு அவர்களின் நகர்வுகளை மட்டுப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

கனடாவிலிருந்து அதிக அளவில் அபிவிருத்தி உதவிகளை பெறும் நாடு Haiti ஆகும். அமெரிக்காவை அடுத்து Haitiக்கு அதிகளவில் நன்கொடை வழங்கும் நாடு கனடா  ஆகும். 

Related posts

July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்

Gaya Raja

COVID தொற்று கனடாவில் மீண்டும் மோசமடைகின்றது

Lankathas Pathmanathan

Calgaryயில் E. coli நோய் தொற்று 264ஆக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!