November 12, 2025
தேசியம்
செய்திகள்

$34.5 மில்லியன் மதிப்புள்ள 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

34.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள 600 திருடப்பட்ட வாகனங்கள் Montreal துறைமுகத்தில் மீட்கப்பட்டன

கனடா எல்லை சேவைகள் முகமைக்கும் (CBSA) பல காவல் துறைகளுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையை தொடர்ந்து இந்த வாகனங்கள் மீட்கப்பட்டன.

CBSA, Ontario, Quebec காவல்துறையின் பிரதிநிதிகள் புதன்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.

Project Vector என்ற காவல்துறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டவிரோத ஏற்றுமதிக்காக தயாராக இருந்த 598 வாகனங்களை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த வாகனங்கள் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்ததாக Ontario மாகாண காவல்துறை (OPP) துணை ஆணையர் Marty Kearns கூறினார்.

மீட்கப்பட்ட சுமார் 75 சதவீத வாகனங்கள் Ontarioவில் திருடப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளன என CBSA கூறியது.

Ontarioவில் திருடப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட வாகனங்களின் மதிப்பு $34.5 மில்லியன் ஆகும்.

கனடாவில் ஆண்டுக்கு 90,000 வாகனங்கள் திருடப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related posts

Nova Scotiaவில் 30 சென்றி மீற்றருக்கும் அதிகமான பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

சுதந்திரத் தொடரணி காலத்தில் Ottawa காவல்துறை மீது 400க்கும் மேற்பட்ட புகார்கள்

Lankathas Pathmanathan

November 4ஆம் திகதி Don Valley மேற்கு இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment