தேசியம்
செய்திகள்

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் இந்த ஆண்டு 2.75 சதவீதத்தை எட்டும்

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் இந்த ஆண்டு 2.75 சதவீதத்தை எட்டும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்துவதை பின்பற்றி கனடிய மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை முக்கால் சதவிகிதம் உயர்த்துவதாக இன்று அறிவித்தது.
கனடிய வங்கி சமீபத்தில் அதன் வட்டி விகிதத்தை இரண்டு முறை அரை புள்ளியால் உயர்த்தியது.
இந்த அதிகரிப்பு June மாதத்தில் 1.5 சதவீதமாக இருந்தது.
ஆனாலும் மேலும் வலுவாக செயல்படத் தயாராக இருப்பதாக வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் அமெரிக்க வங்கிகளின் ஆணையத்தை பிரதிபலிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.

Related posts

பசுமைக் கட்சி தலைவர் மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

கனேடிய தங்க மகன் De Grasse!

Gaya Raja

Leave a Comment