தேசியம்
செய்திகள்

மருந்தக கட்டமைப்பு சட்டத்தை வலியுறுத்தும் NDP தலைவர்

March மாதம் 1ஆம் திகதிக்குள் மருந்தக கட்டமைப்பு (pharma care) சட்டத்தை முன்வைக்க வேண்டும் என பிரதமரிடம் NDP தலைவர் வலியுறுத்தினார்.

March மாதம் 1ஆம் திகதிக்குள் மருந்தக கட்டமைப்பு சட்டத்தை முன் வைக்க தவறினால் அரசாங்கத்துடன் உள்ள நம்பிக்கை ஒப்பந்தம் முறியடிக்கப்படும் என NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.

இந்த விடயம் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக Jagmeet Singh தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை (05) பிரதமர் Justin Trudeau – NDP தலைவர் Jagmeet Singh இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

வாக்குறுதியளிக்கப்பட்ட மருந்தக கட்டமைப்பு சட்டம் குறித்து இந்த சந்திப்பின் போது பிரதமரிடம் வலியுறுத்தியதாக NDP தலைவர் கூறினார்.

March மாதம் 1ஆம் திகதிக்குள் மருந்தக கட்டமைப்பு சட்டத்தை முன் வைக்காவிட்டால் அதற்கு பக்க விளைவுகள் இருக்கும் என Jagmeet Singh எச்சரித்தார்.

Related posts

Ontarioவில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு புதிய வழிகாட்டுதல் விரைவில்

Gaya Raja

கனடாவின் மிகப்பெரிய Pride ஊர்வலம் Torontoவில்

Lankathas Pathmanathan

தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் விகிதங்கள் அதிகரிப்பு: Dr. Theresa Tam

Lankathas Pathmanathan

Leave a Comment