தேசியம்
செய்திகள்

கனடாவின் எதிர்காலத்தை கனடியர்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள்: பிரதமர் Mark Carney!

கனடாவின் இறையாண்மையில் வெளிநாட்டுத் தொழில்நுட்ப அதிபர்களின் தலையீடு தேவையற்றது என பிரதமர் Mark Carney கூறினார்.

கனடாவிலிருந்து Quebec மாகாணம் பிரிந்து தனி நாடாக மாற வேண்டும் என Tesla, X நிறுவனங்களின் தலைமை நிர்வாகி Elon Musk பகிரங்கமாக தெரிவித்த நிலையில் கனடிய பிரதமர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

கனடாவின் எதிர்காலத்தை கனடியர்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள் என Mark Carney வியாழக்கிழமை (08) பதிலடி கொடுத்துள்ளார்.

Quebec மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது,  Elon Musk முன்வைத்த சர்ச்சைமிக்கப் பதிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு முதன்முறையாகப் பிரதமர் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

அமெரிக்க கோடீஸ்வரர் விடுத்துள்ள பிரிவினைவாத முழக்கத்தை முற்றிலும் நிராகரித்த Mark Carney கனடா என்பது ஆழமான வரலாற்றுப் பின்னணியையும், மக்களாட்சி மாண்புகளையும் கொண்ட ஒரு சுதந்திர நாடு என நினைவுபடுத்தினார்.

கனடாவின் இறையாண்மையை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் “வெளிநாட்டுப் பிரமுகர்கள் எங்கள் நாட்டைப் பற்றி பேச தகுதியில்லை” என கூறி, அதை கனடிய நுகர்வோரும் ஒட்டுமொத்தக் கனடிய மக்களும் மட்டுமே தீர்மானிப்பார்கள் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து Saskatchewan மாகாணம் பிரிந்து செல்ல வேண்டும் என Elon Musk முன்வைத்த பிரிவினைவாதக் கோரிக்கையை மாகாண முதல்வர் Scott Moe இந்த வாரம் நிராகரித்தார்.

இதனை தனது செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டிய பிரதமர், உள்நாட்டு தலைவர்கள் அனைவரும் தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காப்பதில் கட்சி பாகுபாடின்றி உறுதியாக உள்ளார்கள் என பெருமிதம் கொண்டார்.

அண்மையில் நடைபெற்ற Quebec மாகாணச் சட்டமன்ற தேர்தலில், கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடாகப் பிரகடனம் செய்யக் கோரும் Parti Québécois கட்சி புதிய சிறுபான்மை அரசை அமைக்கவுள்ள இக்கட்டான சூழ்நிலையில் Elon Musk பதிவு திட்டமிட்ட ஒரு வெளிநாட்டு ஊடுருவலாக நோக்கப்படுகிறது.

Related posts

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை?

Lankathas Pathmanathan

Manitoba மேலும் தடுப்பு கொள்கைகளை அறிவித்தது!

Gaya Raja

கடன் மோசடி திட்டத்தில் 12 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment