$2 பில்லியன் மதிப்பிலான Heat Pump மானியத் திட்டத்தைப் பிரதமர் Mark Carney அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
குளிர்காலம் வேகமாக நெருங்கி வரும் வேளையில், நுகர்வோரின் மாதாந்த எரிசக்திச் செலவுகளைக் கணிசமாக குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் வியாழக்கிழமை (08) அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் நுகர்வோருக்கு பிரம்மாண்ட சலுகையாக நோக்கப்படுகிறது.
பழைய Heat Pump-களை மாற்றி அதிநவீன கருவிகளை பொருத்திக் கொள்ளும் குடும்பங்களுக்கு மிகப்பெரிய பண மானியங்களை வழங்கும் புதிய உள்கட்டமைப்பு திட்டத்தை Mark Carney வெளியிட்டார்.
Quebec மாகாணத்திற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்குள்ள நுகர்வோர், கட்டுமானத் துறை வல்லுநர்கள் மத்தியில் உரையாற்றிய போது இந்த நிதித் திட்டத்தை வெளியிட்டார்
