Manitoba மாகாணம் புதிய COVID தடுப்பு கொள்கைகள் இரண்டை வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பொது இடங்களில் கட்டாய முககவசம் அணிய வேண்டிய தேவை இந்த வார இறுதியில் Manitobaவில் அறிமுகமாகின்றது.
அதேவேளை விளையாட்டு நிகழ்வுகள், உணவகங்கள், உடல் பயிற்சி நிலையங்களில் September மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டன,
September மாதம் 3ஆம் திகதி முதல் சில நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது
மாகாண சுகாதார அமைச்சர் Audrey Gordon, தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Brent Roussin ஆகியோர் இணைந்து இந்த மாற்றங்களை அறிவித்தனர்.