அமெரிக்காவில் கனடியர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கனடியர்கள் கைது, தடுத்து வைப்பு நடவடிக்கைகள் 60 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக புதிய புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கனடியர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே ஆண்டில் 60 சதவீதம் வரை அதிரடியாக அதிகரித்துள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சு வியாழக்கிழமை (08) வெளியிட்டுள்ள தூதரக அறிக்கையின் மூலம் இந்த புள்ளி விவரங்கள் வெளியாகின.
April 2025 முதல் March 2026 வரையிலான காலப்பகுதிகளுக்கு இடையே இந்த 60 சதவீத கைது உயர்வு பதிவாகியுள்ளது.
இதே காலகட்டத்தில் கனடியர்கள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இருந்த போதிலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படும் கனடியார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பதற்கான துல்லியமான காரணங்களை அதிகாரப்பூர்வ அறிக்கை நேரடியாக விளக்கப்படவில்லை.
இருந்த போதிலும், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தனது இரண்டாவது பதவிக் காலத்தில் அமெரிக்கா முழுவதும் குடிவரவு சோதனைகள், அதிரடித் தேடுதல் வேட்டைகளை பன்மடங்கு தீவிரப்படுத்தியுள்ளது இதற்கு பிரதான காரணம் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
