கனடாவில் வீட்டு வாடகை தொடர்ந்து 24 மாதங்களாக வீழ்ச்சியடைந்தது.
புதன்கிழமை (07) வெளியான புதிய தேசிய அறிக்கையில் இந்தத் தகவல் வெளியானது.
கனடாவின் வீட்டு வாடகைச் சந்தை வரலாற்றிலேயே முன்னென்றும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் சராசரி வீட்டு வாடகை தொகை தொடர்ந்து 24 மாதங்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தேசிய அளவில் திரட்டப்பட்ட அதிகாரப்பூர்வ வாடகை சந்தைத் தரவுகளின் படி இந்த விபரம் வெளியானது.
September மாத நிலவரப்படி, கனடா முழுவதும் அனைத்து வகையான குடியிருப்பு சொத்துக்களுக்கான சராசரி வாடகைத் தொகை $2,034 ஆக குறைந்துள்ளது.
இது 2025-ஆம் ஆண்டின் September மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.2 சதவீதம் வீழ்ச்சியாகும்.
இந்த வாடகைத் தொகை, கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவாகியுள்ள மிகக் குறைந்த September மாத சராசரி வாடகை அளவாகும்.
கடந்த May 2024-ல் கனடாவின் சராசரி வாடகை $2,202 என்ற உச்சத்தைத் தொட்டிருந்தது.
இந்த நிலையுடன் ஒப்பிடுகையில் September மாத வாடகை வீதம் 9.2 சதவீதம் வரை சரிந்துள்ளது.
