கனடா மீதான வர்த்தக வரிகள் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியுடன் Michigan மாநில குடியரசுக் கட்சி வேட்பாளர் Mike Rogers பகிரங்கமாக முரண்பட்டுள்ளார்.
அமெரிக்க மேல் சபைக்கான குடியரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளரான இவர், கனடா மீதான Donald Trump நிர்வாகத்தின் புதிய இறக்குமதி வரிகள் Michigan தொழிலாளர்களையும் உற்பத்தித் துறையையும் கடுமையாகப் பாதிக்கும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வரிகள் Michigan பொருளாதாரத்தை முடக்கும் என சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பிரச்சார விளம்பரத்தில் Mike Rogers தெரிவித்தார்.
Donald Trumo-உடன் தனது சொந்தக் கட்சி ரீதியாக பல விவகாரங்களில் இணங்கிப் போகும் Mike Rogers, கனடா உடனான வர்த்தக விவகாரத்தில் மட்டும் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
Michigan மாநிலத்திற்கும் Ontario மாகாணத்தின் வாகன உற்பத்தி நடவடிக்கையும் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடா மீதான வரிகள் Michigan நுகர்வோர், வாகன தொழிற்சாலைகளுக்கு மேலதிக உற்பத்தி செலவை ஏற்படுத்தும் என Mike Rogers கவலை தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் Donald Trump நிர்வாகத்தின் எல்லையோரப் பொருளாதாரக் கெடுபிடிகளுக்கு எதிராக Mike Rogers தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அடுத்த மாதம் 4 – ஆம் திகதி அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற உள்ள சூழலில், Michigan குடியரசுக் கட்சி வேட்பாளரின் இந்த நிலைப்பாடு அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
