கனடாவிலிருந்து Saskatchewan மாகாணம் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை மாகாண முதல்வர் Scott Moe நிராகரித்துள்ளார்.
கனடாவிலிருந்து Saskatchewan மாகாணம் பிரிந்து தனி நாடாக மாற வேண்டும் என்ற உலகப் பெரும் பணக்காரர் Elon Musk முன்வைத்த பிரிவினைவாதக் கோரிக்கையை மாகாண முதல்வர் Scott Moe நிராகரித்துள்ளார்.
சமூக வலைத்தளமான X தளத்தின் உரிமையாளர் Elon Musk, கனடாவின் கூட்டாட்சி அமைப்பை உடைக்கும் வகையில் தொடர்ச்சியான பல சர்ச்சைமிக்கப் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
கனடாவில் நிலவி வரும் தற்போதைய பொருளாதாரப் பதற்றங்களைப் பயன்படுத்திக் கொண்டு Quebec, Quebec, Saskatchewan ஆகிய மூன்று மாகாணங்களும் கனடாவில் இருந்து முற்றிலும் பிரிந்து தனி நாடுகளாக மாற வேண்டும் என Elon Musk பகிரங்கமாகத் தூண்டி இருந்தார்.
Québec மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியடைந்த பிரிவினைவாத கட்சியான Parti Québécois புதிய அரசை அமைக்கப் போவதாகப் பிரகடனம் வெளியாகி, 3-வது தனிநாட்டு பொதுவாக்கெடுப்பிற்கான உத்திகள் ஆலோசிக்கப்பட்டு வரும் வேளையில் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.
அதேவேளையில் Alberta சுதந்திரப் பொது வாக்கெடுப்பு பிரச்சாரங்களின் பின்னணியில் அமெரிக்க குடியரசுக் கட்சியின் சில முக்கிய முகவர்கள் நிதி, உத்திகளை வழங்கி வருவதாக அண்மையில் Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவலை வெளியிட்டிருந்தார்.
Elon Musk-கின் இந்தத் தேவையற்ற தலையீட்டுக்கு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் Saskatchewan மாகாணம் முதல்வர் நேரடியாகப் பதிலளித்துள்ளார்.
