தேசியம்
செய்திகள்

Québec-கில் ஆட்சி மாற்றம்: மாகாணத் தேர்தலில் Parti Québécois அதிரடி வெற்றி

Québec மாகாணச் சட்டமன்றத் தேர்தலின் Parti Québécois (PQ) கட்சி வெற்றி பெற்றது.

திங்கட்கிழமை (05) நடைபெற்ற தேர்தலில் Paul St-Pierre Plamondon தலைமையிலான PQ கட்சி சிறுபான்மை அரசை வெற்றி பெற்றது,

ஆளும் Coalition Avenir Québec (CAQ) கட்சிக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னடைவை ஏற்படுத்தி, இந்த வெற்றியின் மூலம் பிரிவினைவாத Parti Québécois கட்சி மாகாணத்தின் ஒட்டுமொத்த அரசியல் நிலையை அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது.

கடந்த பல வாரங்களாக மக்கள் கருத்துக் கணிப்புகளில் முன்னிலை பெற்று வந்த PQ கட்சி, இத்தேர்தலில் வெற்றி பெற்று மாகாணத்தின்  அடுத்த புதிய அரசாங்கத்தை அமைக்கிறது.

இதன் மூலம் Quebec மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து செல்லும் பொது வாக்கெடுப்பு விரைவில் நடைபெறுவது உறுதியாகிறது.

இம்முறை சட்டமன்றத் தேர்தலில் CAQ கட்சித் தலைவர் தவிர அனைத்து பிரதான கட்சித் தலைவர்களும் வெற்றி பெற்றனர்.

அடுத்த சட்டசபையில் Charles Milliard தலைமையிலான Liberal கட்சி முதன்மை எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

2026 குளிர்கால Olympic: கனடாவின் நான்காவது பதக்கம்

Lankathas Pathmanathan

Ontario தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பம்

COVID காரணமாக 2022இல் 19 ஆயிரம் இறப்புகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment