Toronto, Mississauga நகரசபைகளுக்கான தேர்தலில் முன்கூட்டிய வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (06) காலை ஆரம்பமாகிறது.
செவ்வாய் காலை 10:00 மணி முதல் இந்த அதிகாரப்பூர்வ முன்கூட்டிய வாக்குப்பதிவு ஆரம்பமாகிறது.
ஆனாலும் Ontario மாகாணத்தின் அனைத்து நகராட்சிகளிலும் முன்கூட்டிய வாக்களிப்பு ஒரே நேரத்தில் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ontario நகராட்சி தேர்தல் விதிகளின் படி, ஒவ்வொரு நகரமும் தனக்கான முன்கூட்டிய வாக்களிக்கும் திகதிகளையும் முறைகளையும் தாங்களாகவே முடிவு செய்கின்றன.
October 26, நடைபெறும் பொதுவான நகரசபை தேர்தல் நாளுக்கு முன்னதாக இந்த வாக்குப்பதிவுகள் வெவ்வேறு திகதிகளில் நடத்தப்படுகின்றன.
London போன்ற சில நகராட்சிகளில் October 1-ஆம் திகதியன்று முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பமானது.
Brampton, Vaughan போன்ற பகுதிகளில் இந்த வார இறுதியில் முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பமாகிறது.
Ajax, Pickering போன்ற நகர சபைகளில் October 19-ஆம் திகதி, Whitby நகரசபையில் October 22-ஆம் திகதி முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பமாகிறது.
Markham, Richmond Hill போன்ற பகுதிகளில் இந்த மாதத்தின் நடுப்பகுதியில் முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பிக்கிறது.
