Québec மாகாணச் சட்டமன்றத் தேர்தலின் Parti Québécois (PQ) கட்சி 59 ஆசனங்களை வெற்றி பெற்றது.
இதன் மூலம் திங்கட்கிழமை (05) நடைபெற்ற தேர்தலில் Paul St-Pierre Plamondon தலைமையிலான PQ கட்சி சிறுபான்மை அரசை அமைக்கிறது.
இந்தத் தேர்தலில் Charles Milliard தலைமையிலான Liberal கட்சி (PLQ) 40 ஆசனங்களை வெற்றி பெற்று முதன்மை எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது.
தொடர்ந்து மூன்றாவது தேர்தலாக PLQ கட்சி மாகாணத்தின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிரிவினைவாத PQ கட்சி புதிய சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க போவதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தேர்தல் களத்தில், கூட்டாட்சிக் கொள்கை உடைய PLQ கட்சி அடைந்துள்ள இந்த வெற்றி சட்டசபையில் ஒரு மிகப்பெரிய சமநிலை சக்தியாக நோக்கப்படுகிறது.
அவர்களால் முழுமையான பெரும்பான்மை பலத்தை பெற முடியாமல் போனதால், வரவிருக்கும் புதிய சட்டங்களை நிறைவேற்ற அவர்கள் எதிர்க்கட்சிகளின் ஆதரவையே முழுமையாக நம்பி இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சட்டசபை கலைக்கப்பட்ட போது 19 சட்டமன்ற இடங்களை மட்டுமே கொண்டு வரலாறு காணாத சரிவை சந்தித்திருந்த PLQ கட்சி, இந்தத் தேர்தவில் தங்கள சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கையை இரு மடங்கிற்கு மேலாக உயர்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
மாறாக ஆளும் கட்சியாக தேர்தலை எதிர்கொண்ட Coalition Avenir Québec (CAQ) இந்தத் தேர்தலில் எந்த ஒரு ஆசனத்தையும் வெற்றிபெறவில்லை.
இது கட்சிக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் Conservative Party of Quebec (PCQ) கட்சி 19, Québec Solidaire (QS) 9 என ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.
