November 16, 2025
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெறும் – பெருமான்மையா சிறுபான்மையா என்பது கேள்வி?

தற்போதைய சூழ்நிலையில் திங்கட்கிழமை நடைபெறும் தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெறும் என வெள்ளிக்கிழமை காலை வெளியான கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது.

தபால் மூல வாக்குகளில் Liberal கட்சி பெருமளவில் ஆதரவு பெற்றுள்ளதாக Nanos ஆராய்ச்சியின் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

இது Liberal கட்சிக்கு சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஆசனங்களை திங்கட்கிழமை வெற்றிபெறச் செய்யும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

இதன் மூலம் Liberal கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை வெற்றி பெறும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Liberal கட்சியின் வெற்றிக்கான பாதை 2019 பொது தேர்தலின் போது அவர்கள் அரசாங்கத்தை வென்றதைப் போன்றதாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

இருப்பினும், ஒரு Liberal பெரும்பான்மை சாத்தியத்தின் எல்லைக்கு வெளியே இல்லை எனவும் வெள்ளியன்று வெளியான கருத்து கணிப்பு கூறுகிறது.

2019ஆம் ஆண்டில், Liberal கட்சி மிகவும் இறுக்கமான தேர்தலில் மக்கள் ஆதரவு வாக்குகளை இழந்தது.

ஆனாலும் ஆசன விநியோகம் காரணமாக அவர்கள் ஆட்சியை கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்படும் தமிழர்

Lankathas Pathmanathan

மழை காரணமாக Quebec மாகாணத்தில் அவசர நிலை

Lankathas Pathmanathan

கனடாவில் Moderna mRNA தடுப்பூசி உற்பத்திக்கான உடன்பாடு!

Gaya Raja

Leave a Comment