தேசியம்
செய்திகள்

அமெரிக்க வியூகவாதிகளின் இரகசிய சந்திப்பு குறித்து தெரியாது: மாகாண முதல்வர் அலுவலகம் விளக்கம்!

Alberta மாகாணப் பிரிவினைவாதிகளுடன் அமெரிக்க குடியரசுக் கட்சியின் முக்கிய உத்தேச வியூகவாதிகளின் இரகசிய சந்திப்பு குறித்து அறிந்திருக்கவில்லை என Alberta முதல்வர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் குடியரசு கட்சி நிர்வாகிகள் சிலர் Alberta மாகாணப் பிரிவினைவாதிகளுடன் இரகசியமாகக் கைகோர்த்துச் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் முதல்வர் Danielle Smith இந்தக் கருத்தை தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து Danielle Smith அலுவலகம் ஒரு தெளிவுரை அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

Alberta மாகாணத்தை கனடாவில் இருந்து பிரிப்பதற்கான முயற்சிகளில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிடுவதாக Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Dane Lloyd  பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில் இந்த அறிக்கையை முதல்வர் அலுவலகம் வெளியிட்டது,

Alberta மாகாணத்தை கனடாவில் இருந்து முற்றிலும் பிரித்துத் தனிநாடாக அறிவிக்கக் கோரி  நடத்தப்பட இருக்கும் சுதந்திரப் பொதுவாக்கெடுப்பு பிரச்சாரங்களுக்கு, அமெரிக்க குடியரசுக் கட்சியின் தீவிர உத்திகளை வகுக்கும் சில முக்கிய முகவர்கள் உதவிகளை வழங்கி வருவது கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக Dane Lloyd கூறினார்.

இந்த நிலையில் சுதந்திரப் பொதுவாக்கெடுப்பு தொடர்பான எந்த ஒரு பிரச்சார உத்திகளுக்கும் ஆளும் United Conservative கட்சியோ (UCP)  அல்லது மாகாண அரசோ அமெரிக்காவின் குடியரசு கட்சி வியூக வாதிகளுடன் எவ்வித அதிகாரப்பூர்வ சந்திப்புகளை அல்லது பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என பிரதமர் அலுவலக அறிக்கை குறிப்பிடுகிறது.

பிரிவினைவாத குழுக்கள் தங்களது தனிப்பட்ட மட்டத்தில் ஏதேனும் வெளிநாட்டு நிபுணர்களை நாடி இருக்கலாம் எனவும், அதற்கும் மாகாண முதல்வர் நிர்வாகத்திற்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை எனவும் திங்கட்கிழமை (05) வெளியான அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார்!

Lankathas Pathmanathan

ஈழத்தமிழர்களுக்கு பரிச்சயமான Louise Arbour ஆளுநர் நாயகமாகிறார்

Lankathas Pathmanathan

சட்டவிரோத போதைப்பொருள் நச்சுத்தன்மையால் ஆயிரம் பேர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment