September 29, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவிற்கு மீண்டும் நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவிற்கு சொந்தமான Nord Stream அனுமதி விலக்கை இரத்து செய்வதற்கான கனடாவின் முடிவை உக்ரேனிய ஜனாதிபதி வரவேற்றார்.

ரஷ்யாவின் Gazpromக்குச் சொந்தமான விசையாழியின் ஏற்றுமதி அனுமதியை இரத்து செய்ய கனடாவின் முடிவை உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy வரவேற்றார்.

இந்த விசையாழி Montreal நகரில் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் ரஷ்யாவிற்கு ஏற்றுமதியாக தயாராக இருந்தது.

வெள்ளிக்கிழமை (16) பிரதமர் Justin Trudeauவுடனான தனது தொலைபேசி உரையாடலில் இந்த விடயம் குறித்து உக்ரேனிய ஜனாதிபதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

உக்ரைனுக்கான கனடாவின் தொடர்ச்சியான பங்களிப்புகளுக்கு ஜனாதிபதி Zelenskyy நன்றி தெரிவித்தார்.

Related posts

Haiti நெருக்கடி குறித்து பிரதமர் கவலை!

Lankathas Pathmanathan

Manitoba, Saskatchewan, Alberta மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

ஞாயிறு நடைமுறைக்கு வரும் இலையுதிர் கால நேர மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment