September 30, 2026
தேசியம்
செய்திகள்

World Series 2025: Blue Jays vs Dodgers – வெள்ளி இரவு முதலாவது ஆட்டம்

Toronto Blue Jays அணி World Series தொடரில் Los Angeles Dodgers அணியை எதிர்கொள்கிறது.

World Series தொடரின் முதலாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை (24) இரவு Rogers மைதானத்தில் நடைபெறுகிறது.

Blue Jays அணி மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக World Series தொடருக்கு முன்னேறியது.

கடந்த திங்கட்கிழமை (20) நடந்த American League Championship தொடரின் ஏழாவது ஆட்டத்தில் Blue Jays அணி Seattle Mariners அணியை தோற்கடித்த நிலையில் Dodgers அணியை World Series தொடரில் எதிர்கொள்கிறது.

World Series தொடரின் முதலாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை (24) இரவு Rogers மைதானத்தில் நடைபெறுகிறது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நான்கு ஆட்டங்களை வெற்றி பெறும் அணி, World Series பட்டத்தை வெற்றி பெறும்.

Trey Yesavage முதல் ஆட்டத்தில் Blue Jays அணியின் ஆரம்ப பந்துவீச்சாளராக அறிவிக்கப்பட்டார்.

Toronto-வில் நடைபெறவுள்ள நான்கு World Series ஆட்டங்களுக்கான நுழைவு சீட்டுகள் செவ்வாய்க்கிழமை (21) காலை விற்பனைக்கு விடப்பட்ட 30 நிமிடங்களுக்குள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன.

1993-ஆம் ஆண்டு Blue Jays இறுதியாக World Series தொடரில் பங்கேற்றது.

அந்த ஆண்டு Blue Jays அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக World Series தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒவ்வொரு நாடும் அதன் சொந்த எல்லைக் கொள்கைகளை அமைக்க வேண்டும்: பிரதமர் Trudeau

Gaya Raja

பிரதமர் அலுவலக ஊழியர்கள் அவசர சந்திப்பு!

Lankathas Pathmanathan

நான்கு வளைகுடா நாடுகளுக்கான நாடு கடத்தலை இடை நிறுத்திய CBSA

Lankathas Pathmanathan

Leave a Comment