September 30, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்ட Donald Trump!

கனடாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி முறித்துக் கொண்டார்.

கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வியாழக்கிழமை (23) அறிவித்தார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan குரலைக் கொண்ட Ontario அரசாங்கத்தின் புதிய விளம்பரம் வெளியானதைத் தொடர்ந்து இந்த முடிவை Donald Trump எடுத்துள்ளார்.

இந்த முடிவு குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் ஆவேசமான பதிவு, ஏற்கனவே முடங்கிப் போயிருந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துகின்றது.

Ronald Reagan குரல் தவறாக பயன்படுத்தப்படுவதை Ronald Reagan அறக்கட்டளை குறிப்பிட்டு, அது முன்னாள் ஜனாதிபதியை தவறாக சித்தரிக்கிறது என அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய Donald Trump, இந்த விளம்பரத்தை மோசடி என விமர்சித்தார்.

Related posts

மக்கள் ஆதரவில் முன்னிலையில் Liberal கட்சி!

Lankathas Pathmanathan

Toronto தேர்தல்: சொத்து வரியை குறைக்க நகர முதல்வர் வேட்பாளர்கள் உறுதி?

Lankathas Pathmanathan

கனடாவில் ஆயிரத்தை தாண்டிய குரங்கு காய்ச்சல் தொற்றாளர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment