தேசியம்
செய்திகள்

Belleville யூத வழிபாட்டு தலத்திற்கு வெறுப்புப் பிரசுரங்கள் விநியோகம்!

Belleville நகரில் உள்ள யூத வழிபாட்டு தலம் (Synagogue) ஒன்றிற்கு யூதர்களுக்கு எதிரான இழிவான வெறுப்புப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Sons of Jacob Synagogue யூத வழிபாட்டு தலம் கடந்த மாதம் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானது.

யூத சமூகத்தினர் தங்களின் புனித நாளான Yom Kippu வழிபாட்டிற்காக கூடியிருந்த வேளையில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட வெறுப்புணர்வு சார்ந்த குற்றச் செயல் என Belleville காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட வழிபாட்டு தலத்திற்கு நான்கு வகையிலான வெறுப்புப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன

இந்த புதிய மத வெறுப்பு அச்சுறுத்தலும் அரங்கேறியிருப்பது அப்பகுதி வாழ் மக்களிடையே பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட யூத வழிபாட்டுத் தலத்தின் வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், யூதர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான தீவிரவாத வெறுப்பு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து Belleville காவல்துறையினர் மத வெறுப்பு குற்றம் என்ற கோணத்தில் தங்களது விசாரணையை முன்னெடுக்கின்றனர்.

வழிபாட்டுத் தலத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு (CCTV) காட்சிகளை சேகரித்து காவல்துறையினர் சந்தேக நபர்களை அடையாளம் காண முயல்கின்றனர்.

Related posts

4.7 பில்லியன் செலவில் கனடாவிலேயே தயாராகிறது VIA Rail

Lankathas Pathmanathan

குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது: சுகாதார அமைச்சர் Christine Elliott 

Gaya Raja

C-18 சட்டம் தொடர்பாக Google நிறுவனத்துடன் கனடிய அரசு ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment