தேசியம்
செய்திகள்

கனேடியர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது: போக்குவரத்து அமைச்சர்

நூற்றுக்கணக்கான கனேடிய பயணிகள் மெக்சிகோவில் சிக்கிக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என கனடிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

Sunwing தமது விமான சேவையை இரத்து செய்த நிலையில் நூற்றுக்கணக்கான கனேடிய பயணிகள் மெக்சிகோவில் சிக்கிக் கொண்டனர்.

இந்த நிலை குறித்து மத்திய அரசு கவலை கொண்டுள்ளது என அமைச்சர் Omar Alghabra கூறினார்.

தங்கள் விமான நிறுவனங்கள் பயணம் குறித்து தகவல் தெரிவிக்கவும், இடையூறுகளை சுமூகமாக நிர்வகிக்கவும் கனடியர்கள் எதிர்பார்க்கின்றனர் என அமைச்சர் கூறினார்.

கடந்த வாரம் ஆரம்பமான கடுமையான குளிர்காலப் புயல் காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

January 30 ஆம் திகதி Justin Trudeau அரசாங்கம் கவிழும்?

Lankathas Pathmanathan

காணாமல் போனதாக தேடப்பட்ட இளம் சிறுமி மீட்பு

Lankathas Pathmanathan

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

Leave a Comment