தேசியம்
செய்திகள்

அழுத்தங்களை எதிர்கொள்ளும் கனடிய இராணுவம்

கனடிய இராணுவம் அழுத்தங்களை எதிர்கொள்வதாக கனேடிய இராணுவத்தின் தளபதி தெரிவித்தார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உறுப்பினர் எண்ணிக்கையில் அழுத்தங்களை தனது படை எதிர்கொள்வதாக இராணுவத்தின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Joe Paul கூறினார்.

கனடிய இராணுவத்தினரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 1,200 உறுப்பினர்களால் குறைந்தது.

புதிதாக இராணுவத்தில் இணைந்து கொள்பவர்களின் எண்ணிக்கை இராணுவத்தில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளதாக அவர் கூறினார்.

இது அடுத்த ஆண்டும் தொடரும் நிலையில் கனடிய இராணுவம் மேலும் நூற்றுக்கணக்கானவர்களை இழக்கக்கூடும் என தளபதி Joe Paul தெரிவித்தார்.

அடுத்த வருடம் இராணுவத்தினரின் எண்ணிக்கை மேலும் 800 உறுப்பினர்களால் குறைவடையும் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

கனடிய இராணுவ உறுப்பினர் பனிச்சரிவில் இறந்ததாகக் கருதப்படுகிறது

Lankathas Pathmanathan

தேர்தலில் இருந்து விலகும் முடிவை எடுத்த Paul Chiang

Lankathas Pathmanathan

Ontario: வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

Gaya Raja

Leave a Comment