தேசியம்
செய்திகள்

AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய மேலும் இரண்டு மரணங்கள்!

AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய இரண்டு மரணங்கள் கனடாவின் இரண்டு மாகாணங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Albertaவிலும் New Brunswickகிலும் இந்த மரணங்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.AstraZeneca தடுப்பூசியை பெற்ற பின்னர் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Albertaவில் மரணமடைந்தவர் 50 வயது மதிக்கத்தக்க பெண் என சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். New Brunswickகில் மரணமடைந்தவர் பெண் என்ற தகவல் மாத்திரம் சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்டது.

ஆனாலும் COVID தொற்று அபாயம் AstraZeneca தடுப்பூசியினால் ஏற்படும் ஆபத்தை விட அதிகமானது என இரண்டு மாகாணங்களின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில்   இந்த இரண்டு மாகாணங்களிலும் தொடர்ந்தும் AstraZeneca தடுப்பூசிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் மாகாண முதல்வர்கள்

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டு விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்பு – நால்வர் கைது

Lankathas Pathmanathan

மற்றுமொரு New Brunswick அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment