புதிய West Coast எரிவாயுக் குழாய் திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கனடிய பிரதமர் பிரகடனப்படுத்தினார்.
கனடாவின் புதிய Pacific Link எரிவாயுக் குழாய் திட்டத்தை கனடிய வரலாற்றில் முதலாவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக பிரதமர் Mark Carney அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
Alberta மாகாணத்தில் முதல்வர் Danielle Smith-துடன் இணைந்து நடத்திய அவசரச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்த உள்கட்டமைப்பு திட்டத்தை வியாழக்கிழமை (01) அறிவித்தார்.
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த அறிவித்தல் வெளியானது.
அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பியிருக்கும் கனடாவின் பலவீனத்தை உடைக்கப் பிரதமர் முன்னெடுக்கும் புதிய பொருளாதார வியூகத்தின் கீழ் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுடன் பல விடயங்களில் முரண்பட்டு நின்ற Alberta மாகாண முதல்வர், பிரதமரின் இந்த தேசியப் பிரகடனத்தை முழுமனதாக வரவேற்றுள்ளார்.
இதில் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்பாடுகளில் Alberta பெருமை அடைவதாக செய்தியாளர்களிடம் கூறிய Danielle Smith, இத்திட்டம் மாகாணத்தின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
